Thursday, January 9, 2020

tamil rockers

தமிழ் ராக்கர்ஸ் :

 

https://upload.wikimedia.org/wikipedia/ta/e/e9/Tamil_Rockers_Logo.jpg


தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது (Toronto) வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு server ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை சேவர் (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும். இதில் உள்ள தரவுகளை பதிவறக்கம் செய்ய சில மென்பொருட்கள் தேவைபடுகின்றன உதாரணமாக "யூடொரென்ட்" ஐ கூறலாம். இந்த மென்பொருள் தமிழ் ராக்கர்ஸ் இணையத்திலிருந்து தரவுகளை பதிவறக்கம் செய்ய உதவுவோதோடு உங்கள் கணனியில் பதிவறக்கம் ஆகிய அந்த தரவு மீண்டும் பயனரை போன்ற இன்னொரு பயனருக்கு பதிவேற்றம் செய்யவும் உதவுகிறது.  பெற்ற தரவு/ தகவல்களை பரிமாறுவதன் மூலம் தமிழ் ராக்கர்ஸ் இணைய உரிமையாளர் பெறும் அதே சட்டச்சிக்கலை பயனரும் பெற வேண்டிய நிலை உருவாகிறது.

புதிய திரைப்படங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவாலாக திரையிடப்பட்ட அன்றே இணையத்தில் பரப்பி வருகின்றனர். இந்த இணையத்தளத்தின் உரிமையாளரெனக் கருதி, கவுரிசங்கர் என்பவரை கைது செய்தனர், ஆனால் அவருக்கும் இந்த இணையத்தளத்திற்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி அவர் கைதான அன்று வெளியான   திரைப்படமும் முதல் தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது.



வரலாறு

2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களாக பலர் உள்ளனர். இவர்கள் கனடா, பிரான்சு, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து செயல்படலாம் என்று கருதப்படுகிறது. செல்பேசிகளில்கூட திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் தொழில்நுட்பம் வந்த பிறகு தமிழ் ராக்கர்ஸ் அசுர வளர்ச்சி அடைந்தது. இந்த இணையதளத்தில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை என்றாலும், பதிவிறக்கம் செய்யும்போது அதனுடன் ஒரு பாப்அப் விளம்பரமும் பதிவிறக்கம் ஆகும். அந்த விளம்பரம் மூலம்தான் இவர்கள் மாதம் பல லட்சங்கள் ஈட்டுகின்றனர்.
Thanks to wikipedia












No comments:

Post a Comment

NARUTO................

IMF Natuto #naruto #Tamil #trendingreels #bluesky @amazingnature.bsky.social [image or embed] — A10c ( @a10c.bsky.social ) November 20, 202...